தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அடுத்த மாதம் 4 நாட்கள் முகாம்

Published On 2023-10-26 06:47 GMT   |   Update On 2023-10-26 06:47 GMT
  • தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.
  • விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9-ந்தேதி கடைசி நாளாகும்.

சென்னை:

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து தேர்தல் துறை அதிகாரிகளிடம் அளிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை அளிக்க டிசம்பர் 9-ந்தேதி கடைசி நாளாகும்.

நவ. 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம். இந்தப் படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News