கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்- த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பு
- அனைத்து கட்சியினரையும் நேரில் அழைக்க உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.
- தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் சார்பாக நினைவு தினத்தை கொண்டாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் நேரில் அழைக்க உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.
மேலும், வருகிற 28-ந்தேதி எங்கள் தலைவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் சார்பாக நினைவு தினத்தை கொண்டாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.