தமிழ்நாடு

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா இணையதளம் செயல்படாது- தமிழக அரசு

Published On 2024-12-28 02:34 GMT   |   Update On 2024-12-28 02:34 GMT
  • “தமிழ்நிலம்” மென்பொருளில், விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • பட்டா இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

சென்னை:

தமிழக அரசின் நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான "தமிழ்நிலம்" மென்பொருளில், விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே 28-ந்தேதி (இன்று) காலை 10 மணி முதல் 31-ந்தேதி மாலை 4 மணி வரை 4 நாட்கள் இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் "தமிழ்நிலம்" https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html பட்டா இணையவழி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

Tags:    

Similar News