தமிழ்நாடு

ஞானசேகரன் மனைவி பல்கலைக்கழக ஊழியர்- அமைச்சர் விளக்கம்

Published On 2024-12-27 10:29 GMT   |   Update On 2024-12-27 10:29 GMT
  • பல்கலைக்கழக நேரம் தவிர வேறு யார் வந்தாலும் உரிய அடையாள அட்டை காட்டி, பதிவு செய்து தான் வர வேண்டும்.
  • குற்றத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகவும், உயர்கல்வி துறையும் துணை இருக்கும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்தபோது நேரம் 8 மணி.

* பல்கலைக்கழகத்திற்குள் ஞானசேகரன் அடிக்கடி வந்துபோய் பழக்கத்தில் இருந்துள்ளார். அவருடைய மனைவி பல்கலைக்கழக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதுவே பல்கலைக்கழகத்திற்குள் வந்து செல்ல சாதகமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகப்பட்டு இவரை உள்ளே வராதே என்று சொல்லக்கூடிய சூழல் இல்லாமல் இருந்துள்ளது.

* இப்பொழுது நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கிறோம். பல்கலைக்கழக நேரம் தவிர வேறு யார் வந்தாலும் உரிய அடையாள அட்டை காட்டி, பதிவு செய்து தான் வர வேண்டும்.

* வாகனங்களில் வந்தால் கூட அவர்களை சிசிடிவி கேமராவில் கண்காணித்து, படம் எடுக்க வேண்டும். வாகன எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

* குற்றத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகவும், உயர்கல்வி துறையும் துணை இருக்கும். அரசு பெருந்துணையாக இருக்கும்.

* பிளாட்பார்ம் ஓரத்தில் ஞானசேகரன் பிரியாணி கடை வைத்து இருப்பதாகவும், பல மாணவர்களுக்கு அவர் தெரிந்த முகம் என்பதாலும், அவருடைய மனைவி பணியாற்றுகிறார் என்பதாலும் வருவார் என்று சொல்கிற செய்தி தான். அது இன்னும் விசாரணையில் தான் முழுமையாக தெரியும்.

* இந்த சம்பவத்தில அவருடைய மனைவியின் பங்கு உள்ளதா? என்பது விசாரணையின்போது தெரியும் என்று கூறினார்.

Tags:    

Similar News