காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி
- காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாக கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பதிவு மற்றும் புகைப்படங்களை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.