அய்யா நல்லகண்ணுவின் சமரசமற்ற மக்கள் பணி - கொள்கை உறுதியை என்றும் போற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின்
- நல்லகண்ணு பிறந்தநாள் முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- அய்யா நல்லகண்ணுவின் வாழ்க்கை அடுத்தடுத்த தலைமுறைக்கு ஒரு பாடம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இவரது பிறந்தநாள் முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்லகண்ணுவின் பிறந்தநாளையொட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலின் முதுபெரும் தலைவர் - விடுதலைப் போராட்ட வீரர் - பொதுவுடைமை இயக்கப் போராளி அய்யா நல்லகண்ணு அவர்களின் 100 ஆவது பிறந்த நாளில் அவரை வாழ்த்தி மகிழ்கிறோம்.
நேர்மையும் - எளிமையுமே பொதுவாழ்விற்கான அடித்தளம் என்பதன் வாழும் உதாரணமாகத் திகழும் அய்யா நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை அடுத்தடுத்த தலைமுறைக்கு ஒரு பாடம்.
நம் திராவிட மாடல் அரசால் "தகைசால் தமிழர்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட , அய்யாவின் சமரசமற்ற மக்கள் பணி - கொள்கை உறுதியை என்றும் போற்றுவோம்.
வாழ்க பல்லாண்டு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.