திருப்பூரில் 3 கார்கள் தீ வைத்து எரிப்பு- போலீசார் விசாரணை
- தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
- கார்களில் தீப்பற்றியது எப்படி என்பது தெரியவில்லை.
திருப்பூர்:
திருப்பூர் கோல்டன் நகர் தொட்டி மண்ணரை பகுதியை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (வயது 28). இவர் அப்பகுதியில் கார் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இதற்காக கார்களை அவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்தி ருந்தார். நேற்றிரவு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் 3 கார்கள் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமாகின. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.
கார்களில் தீப்பற்றியது எப்படி என்பது தெரியவில்லை. தொழில் போட்டி காரணமாக யாராவது கார்களை தீ வைத்து எரித்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.