தமிழ்நாடு

சென்னை திரும்பும் பயணிகளுக்கு அதிர்ச்சி- விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு

Published On 2025-01-18 15:33 IST   |   Update On 2025-01-18 15:33:00 IST
  • விடுமுறை முடிந்த நிலையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால் விமானத்தை தேர்வு செய்யும் மக்கள்.

பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்ததால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

இந்நிலையில் விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். குறிப்பாக, பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால், மக்கள் விமானத்தில் பயணிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுபோன்ற சூழல்களில் விமான பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, மதுரை- சென்னைக்கு வழக்கமாக ரூ.3,999 ஆக கட்டணம் இருந்த நிலையில், இன்றைய தினம் விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரித்துள்ளது.

அதேபோல திருச்சி – சென்னை இடையே வழக்கமாக ரூ.2,199 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது ரூ.ரூ.11,089 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி – சென்னை இடையே வழக்கமான கட்டணம் ரூ 4,199 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,365ஆக உயர்ந்துள்ளது.

சேலம் – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ 2,799 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.10,441 வரை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News