தமிழ்நாடு
திண்டிவனத்தில் டாபர் ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி
- சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் வழங்கியுள்ளது.
- டாபர் நிறுவனத்தின் தொழிற்சாலை மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்புக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் டாபர் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் வழங்கியுள்ளது.
திண்டிவனம் சிப்காட் உணவு பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையை டாபர் நிறுவனம் தொடங்க உள்ளது.
மேலும், 1,36,585 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில் தேன், ஓடோ டெல், டாபர் ரெட், ரோஸ் வாட்டர் உள்ளிட் பொருட்களை தயாரிக்க டாபர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டாபர் நிறுவனத்தின் தொழிற்சாலை மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்புக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலையை நிறுவவுவதற்கு கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.