தமிழ்நாடு
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மூதாட்டி கொலை- மாற்றுத்திறனாளி கைது
- முத்து என்ற மாற்றுத்திறனாளியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
- சம்பவம் குறித்து மேற்கு மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைதாப்பேட்டை:
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த 65 வயதான மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு கால்களையும் இழந்த முத்து என்ற மாற்றுத்திறனாளியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கொலையான மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மூதாட்டி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து மேற்கு மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.