தமிழ்நாடு

Video: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தம்பதிகளுக்காக நடத்தப்பட்ட வித்தியாசமான விளையாட்டு போட்டி

Published On 2025-01-16 16:36 IST   |   Update On 2025-01-16 17:04:00 IST
  • திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திக்குளம் கிராமத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது.
  • வெற்றி பெற்ற தம்பதிகளுக்கு கொப்பரை அண்டா பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருநெல்வேலியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தம்பதிகளுக்காக வித்தியாசமான விளையாட்டு போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது.

ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திக்குளம் கிராமத்தில் தம்பதிகள் தங்களது வாயில் பந்துகளை வைத்து கீழே விழாமல் பத்திரமாக கொண்டு போய் சேர்க்கும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் அதிக பந்துகளை சேர்த்து வெற்றி பெற்ற தம்பதிகளுக்கு கொப்பரை அண்டா பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News