தமிழ்நாடு
அரக்கோணத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
- வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பிரவீன் நுழைவுவாயில் பணியில் இருந்தபோது திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள வளாகத்தில் பிரவீன் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட வீரர் பிரவீன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
பிரவீன் நுழைவுவாயில் பணியில் இருந்தபோது திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
பிரவீன் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.