அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் ? உச்சநீதிமன்றம் கேள்வி
- போக்குவரத்துத் துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ?
- செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்பினால் அவருக்கு எதிரான வழக்கை மெரிட்டில் விசாரிக்கலாம்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், போக்குவரத்துத் துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமைச்சராக தொடர செந்தில் பாலாஜி விரும்புகிறாரா ? என்பதை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்பினால் அவருக்கு எதிரான வழக்கை மெரிட்டில் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த முறையே அதிருப்தியை தெரிவித்திருந்தோம், உரிய விளக்கம் அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சிகளாக உள்ளதால் அவர்கள் பயப்பட வாய்ப்புள்ளது. 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அமைச்சராக தொடர்ந்தால் என்னவாகும் ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.