பெண்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- மேயர் பிரியா
- மேயர் பிரியா கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- திமுக சார்பு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சிக்கு பிறகு மேயர் ப்ரியா பேட்டி அளித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டிகளில் இளைஞரணி, அயலக அணி, மாணவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிக்காக சென்னை மேயர் பிரியா தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேயர் பிரியா கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுக சார்பு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சிக்கு பிறகு மேயர் ப்ரியா பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கழகத்தின் விளையாட்டு அணி சார்பாக விளையாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் சிறப்பு முறையில் கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறார்.
இதை துணை செயலாளர் கவுதம் அவர்களும் மற்றும் ஜெசிகா அவர்களும் ஒன்றிணைந்து திருவல்லிக்கேணியில் உள்ள இந்த பகுதியில் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு என்ற தனித்துவத்தை பிற மாநிலங்களின் வேகத்தக்க அளவிற்கு துணை முதலமைச்சர் தமிழகத்தை வளர்த்து வருகிறார்.
வரக்கூடிய இளைஞர்களுக்கு இன்றைய விளையாட்டுத்துறையில் தங்களுடைய சாதனைகளை பயன்பிக்க நல்ல ஒரு மேடையை தமிழக அரசு உருவாக்கி கொடுத்திருக்கிறது.
அந்த வகையில் கழகத்தை சார்ந்தவர்களும் விளையாட்டில் உற்சாகமாக இருக்க வேண்டும் என்ற வகையில் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துருக்கிறார்கள்.
வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்ககென் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார். பெண்களுக்கான திட்டமாக இருக்கிறது. கட்சியில் இருக்கக்கூடிய பெண்களையும் சமத்துவமாக கொண்டு விளையாட்டு போட்டிகளில் உரிமையை வழங்கி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.