தமிழ்நாடு

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஜாமின் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Published On 2024-12-23 09:20 GMT   |   Update On 2024-12-23 09:20 GMT
  • அலிகான் துக்ளகிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • ஜாமின் மனுவை விசாரித்த அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் போதைப் பொருள் வழக்கில் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போலீசார் 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அலிகான் துக்ளகிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, ஜாமின் கோரி அம்பத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நாளை இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News