தமிழ்நாடு

முகூர்த்த தினமான நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வசதி

Published On 2025-03-16 13:14 IST   |   Update On 2025-03-16 13:14:00 IST
  • பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
  • 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்கள்.

பத்திரப் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், அந்த நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

தற்போது பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17-ந் தேதி (நாளை) அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்தால் 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும்.

அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News