தமிழ்நாடு

ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் - அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சு

Published On 2025-01-01 16:10 GMT   |   Update On 2025-01-01 16:10 GMT
  • நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்.
  • படிப்பறிவில் நாம் பின்தங்கி இருந்ததால் நமது வரலாறு மறைக்கப்பட்டது.

ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மூர்த்தி, "ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்துச் சென்றபோது, அவர்களுக்கு எதிராக போராட்டத்தில், நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்க வேண்டும்.

படிப்பறிவில் நாம் பின்தங்கி இருந்ததால் நமது வரலாறு மறைக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது" என்று பேசினார்.

Tags:    

Similar News