தமிழ்நாடு
அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு
- அரசு நியமித்த தேடுதல் குழுவின் யுஜிசி பிரதிநிதி இல்லாமல் இருப்பது விதிகளுக்கு முரணானது.
- நான் பிறப்பித்து உத்தரவை அமல்படுத்துங்கள் என்று தமிழக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்..
தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும் என்றும் அரசு நியமித்த தேடுதல் குழுவின் யுஜிசி பிரதிநிதி இல்லாமல் இருப்பது விதிகளுக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், துணை வேந்தரை தேர்ந்தெடுக்க பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதியையும் தேடுதல் குழுவில் சேர்த்து ஏற்கனவே நான் பிறப்பித்து உத்தரவை அமல்படுத்துங்கள் என்று தமிழக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.