தமிழ்நாடு

கேரள மருத்துவக் கழிவுகள்- பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

Published On 2024-12-18 13:29 GMT   |   Update On 2024-12-18 13:29 GMT
  • கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
  • தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் நேற்று முன்தினம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் செலவினை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலியுங்கள் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News