தமிழ்நாடு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்
- எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை நேற்று (மார்ச் 25) சந்தித்த நிலையில் அண்ணாமலை நாளை (மார்ச் 27) காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.