டெல்லி புறப்பட்டு சென்றார் அண்ணாமலை
- கூட்டணியில் எந்த கட்சியாவது நிலையாக இருந்து இருக்கிறதா?.
- டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ள நிலையில், அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, "கூட்டணியில் எந்த கட்சியாவது நிலையாக இருந்து இருக்கிறதா?. தி.மு.க.வில் உள்ள கட்சிகள் நிலையாக இருக்கிறதா? இருக்கப்போகிறதா?. அது பற்றி சொல்ல முடியாது. இது அரசியல். அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றங்கள் இருக்கும்," என்று கூறினார்.
மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைய எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் பேசு பொருளாகி உள்ளது.
டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி திரும்பிய நிலையில், அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.