தமிழ்நாடு

சென்னை புத்தகக் கண்காட்சி- நாளை தொடங்கி வைக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-12-26 05:16 GMT   |   Update On 2024-12-26 06:33 GMT
  • மொத்தம் 900 அரங்குகள் இடம்பெறும்.
  • அனைத்து அரங்கிலும் 10 சதவீத சலுகை விலையில் அனைத்து புத்தகங்களும் விற்பனை செய்யப்படும்.

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சியை நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாளை நடைபெறும் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

நந்தனத்தில் அமைந்துள்ள YMCA உடற்கல்வியில் கல்லூரியில் நாளை தொடங்கும் புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 900 அரங்குகள் இடம்பெறும். வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணிவரையும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அனைத்து அரங்கிலும் 10 சதவீத சலுகை விலையில் அனைத்து புத்தகங்களும் விற்பனை செய்யப்படும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருது ஆகியவை வழங்கப்பட உள்ளது. அதன்விவரம்:-



இதனை தொடர்ந்து 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம்:-

 



Tags:    

Similar News