தமிழ்நாடு

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டம்- ரூ.168 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது

Published On 2024-12-13 16:39 GMT   |   Update On 2024-12-13 16:39 GMT
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர், Jakson Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் அங்கூர் கோயல் ஆகியோர் கையெழுத்து.
  • மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வழித்தடம் 5-ல் மின், இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் மாதவரம் பால் பண்ணை நிலையம் முதல் கோயம்பேடு 100 அடி சாலை நிலையம் வரை 10 உயர்மட்ட நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (VAC) போன்ற மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் M/s Jakson Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் (அமைப்புகள் மற்றும் இயக்கம் ராஜேஷ் சதுர்வேதி), M/s Jakson Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் (EPC business) அங்கூர் கோயல் ஆகியோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News