தமிழ்நாடு
காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்பட்டுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
- காலை உணவுத்திட்டம் குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு.
- நன்கு ஊட்டமளிக்கப்பட்ட குழந்தை பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காலை உணவுத்திட்டம் குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குழந்தைகளின் கவனம், நினைவாற்றல், கற்றல் விளைவுகளை மேம்படுத்துகிறது.
சிந்தனையுடன் திட்டமிடுவது என்பது பிரச்சனைகளை தீர்ப்பது மட்டுமல்ல, நாம் நினைத்துப் பார்க்க முடியாத சமூகத்தை மாற்றுகிறது.
நன்கு ஊட்டமளிக்கப்பட்ட குழந்தை பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறது. இது நீண்டகால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.