தமிழ்நாடு

சட்டமன்றத்தின் மாண்பை கவர்னர் மதிக்கவில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On 2025-01-11 10:14 IST   |   Update On 2025-01-11 10:14:00 IST
  • தமிழகம் வளர்ந்து வருவதை கவர்னரால் ஜீரணிக்க முடியவில்லை.
  • தமிழ்தாய் வாழ்த்தை அவமதிக்க துணிந்துவிட்டார் கவர்னர்.

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் 'பராசக்தி' பட வசனத்தை மேற்கொள்காட்டி கவர்னரின் செயலை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

* சட்டமன்றத்தில் பல விசித்திரமான காட்சிகளை பார்த்து வருகிறோம்.

* ஆண்டின் முதல் பேரவை கூட்டத்தில் கவர்னர் உரையாற்றாமல் சென்று விடுகிறார்.

* விதிகளை மாற்றுவதையை வழக்கமாக கொண்டுள்ளார் கவர்னர்.

* சட்டமன்றத்தின் மாண்பை கவர்னர் ரவி மதிக்கவில்லை.

* தமிழகம் வளர்ந்து வருவதை கவர்னரால் ஜீரணிக்க முடியவில்லை.

* பதவிக்கும் பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படுத்தும் கவர்னரை இந்த மன்றம் இதுவரை கண்டதில்லை. இனி காணவும் கூடாது.

* தமிழ்தாய் வாழ்த்தை அவமதிக்க துணிந்துவிட்டார் கவர்னர்.

* விடியல் தரபோவதாக சொன்னது மக்களுக்கு தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல.

* நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் முகங்களில் வெளிப்படும் மகிழ்ச்சியே விடியல் என்றார். 

Tags:    

Similar News