தமிழ்நாடு

மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு ஆகிய அனைத்தையும் செய்தது காங்கிரஸ்: அதிமுக எம்.பி. தம்பிதுரை

Published On 2025-03-11 19:11 IST   |   Update On 2025-03-11 19:11:00 IST
  • 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் திமுக தற்போது நாடகங்களை மேற்கொண்டு இருக்கிறது.
  • இந்த முறை மக்கள் திமுக-விற்கு வாக்களிக்க போவதில்லை. அதிமுக-தான் வெற்றிபெறும்.

தமிழகத்தில் மும்மொழி கொள்கை மூலமாக இந்தியை திணிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயன்று வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை, "மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு அனைத்தையும் செய்தது காங்கிரஸ். 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் திமுக தற்போது நாடகங்களை மேற்கொண்டு இருக்கிறது. இந்த முறை மக்கள் திமுக-விற்கு வாக்களிக்க போவதில்லை. அதிமுக-தான் வெற்றி பெறும்" என்றார்.

Tags:    

Similar News