தமிழ்நாடு

யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை - செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்

Published On 2025-03-15 12:20 IST   |   Update On 2025-03-15 12:20:00 IST
  • ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள்.
  • அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படும் கட்சி.

சென்னை:

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பொது பட்ஜெட்டும், இன்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபை நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக நேற்றும், இன்றும், அவையில் என்னென்ன விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற இரண்டு நாட்களிலும் முன்னாள் அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடமே கேளுங்கள். செங்கோட்டையனுக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும். நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை. அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படும் கட்சி என்றார்.

முன்னதாக, சட்டசபைக்கு வந்த செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கு சென்று அவரை சந்தித்து பின்னர் அவை நிகழ்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து விட்டு செங்கோட்டையன் தனித்து செயல்படுவதால் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News