அமைச்சருக்கு பதிலாக சபாநாயகர் குறுக்கிட்டு பதில் கூறுகிறார் - இ.பி.எஸ். குற்றச்சாட்டு
- அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேச அதிக நேரம் வாய்ப்பு தரப்பட்டது.
- தங்கள் ஆட்சியின் மீதுள்ள குறைகளை மறைக்க அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் என பேசுகிறார் முதலமைச்சர்.
சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டி இருந்ததால் சட்டசபையில் அதிக நேரம் எடுத்துக்கொண்டோம்.
* தமிழகத்தில் அதிக பிரச்சனைகள் உள்ளதால் அதிக நேரம் பேச வேண்டி இருந்தது.
* அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேச அதிக நேரம் வாய்ப்பு தரப்பட்டது.
* நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நான் பேசியது ஒளிபரப்பப்படவில்லை.
* சட்டப்பேரவை தலைவர் இரண்டு தரப்பிற்கும் சமமாக நடப்பதுதான் அவருக்கு அழகு.
* மீண்டும் சட்டசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் அளிக்கிறார்.
* 2.52 மணி நேரம் எதிர்க்கட்சியினர் பேசியதாக கூறுகிறார்கள். வீடியோவை பார்த்தபோது பாதி கூட பேசவில்லை என்பது தெரிகிறது.
* கே.பி.முனுசாமி பேசியபோது அமைச்சருக்கு பதில் சபாநாயகர் குறுக்கிட்டு பதில் கூறுகிறார். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.
* ஆளுங்கட்சி இருக்கையில் அமர்ந்து அப்பாவு கருத்து கூறலாம். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தால் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.