தமிழ்நாடு
மாணவிகள் `அப்பா' என்று அழைப்பதை நினைத்து மகிழ்ச்சி: சட்டசபையில் கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்
- அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவது பற்றி குறிப்பிட்டார்.
- புதுமைப்பெண்கள் திட்டத்தால் மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது.
சட்ட சபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, "அரசின் திட்டங்களால் ஒவ்வொரு துறையிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவது பற்றி குறிப்பிட்டார்.
புதுமைப்பெண்கள் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதால் கல்லூரிகளுக்கு மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்த திட்டத்தால் பலன் அடைந்து வரும் மாணவிகள் 'அப்பா' என்று என்னை அழைப்பதை கேட்டு மகிழ்ந்து போகிறேன்" என்றார்.
இவ்வாறு பேசும் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் தொடர்ந்து அவர் பேசினார்.