தமிழ்நாடு

5 நாளும் உப்புமா போட தமிழகம் என்ன சோமாலியாவா? - காலை உணவுத் திட்டம் பற்றி பேசிய சீமான் - திமுக கண்டனம்

Published On 2024-12-29 06:58 GMT   |   Update On 2024-12-29 06:58 GMT
  • இது என்ன சோமாலியா, கென்யா, நைஜீரியா மாதிரி இருக்கிறதா?
  • காலையில் என்ன சாப்பாடு தருகிறார்கள், பால், முட்டை போலவே தருகிறார்கள்?

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022 முதல் செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

60 வருடமாக ஆட்சி செய்து காலையில் சாப்பிட்டு வரமுடியாத நிலைமையில்தான் நமது பிள்ளைகளை வைத்துள்ளீர்களா? இது என்ன சோமாலியா, கென்யா, நைஜீரியா மாதிரி இருக்கிறதா? எல்லா வளமும் இருக்கிறதே..

காலையில் என்ன சாப்பாடு தருகிறார்கள், பால், முட்டை போலவே தருகிறார்கள்? 7 நாட்களில் 5 நாட்கள் உப்புமா தான் போடுகிறார்கள், இது காலை உணவித் திட்டாமா இல்லை உப்புமா கம்பெனியா? நீங்கள் உப்புமா கம்பெனிதான் நடத்துகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தரப்பு, தாய்மார்கள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளார்கள், ஆனால் சீமான் பேச்சு தமிழர்களுக்கு எதிரானது, அவரது அரசியல் என்பது இவ்வளவுதான் என்றும் தற்குறித் தனமானது என்றும் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News