தமிழ்நாடு

சிவகங்கையில் 20 ஆண்டுகளாக கொத்தடிமையாக ஆடு மேய்த்தவர் மீட்பு

Published On 2025-03-16 16:17 IST   |   Update On 2025-03-16 16:17:00 IST
  • அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் ரயிலில் ஏறி சிவகங்கை சென்றுள்ளார்
  • பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்தது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே 20 ஆண்டுகளுக்கும் மேல் கொத்தடிமையாக ஆடு மேய்த்த முதியவர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளி அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயிலில் செல்கையில் டீ குடிக்க இறங்கியவர் தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறி, விபரம் அறியாமல் சிவகங்கை சென்றுள்ளார்

கடம்பங்குளம் பகுதியைச் சேர்ந்த மலைக்கண்ணு, அவரை கூட்டிச் சென்று ஆடு மேய்க்க வைத்துள்ளார். மலைக்கண்ணு இறந்துவிட, அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவரும் ஊதியம் இல்லாமல் உணவு மட்டும் கொடுத்து ஆடுமேய்க்க வைத்துள்ளார்.

சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்து விசாரணை நடத்தி குடும்பத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.

அப்பாராவின் மனைவி சீத்தாம்மா இறந்து விட்டதாகவும் மகளுக்கு திருமணமான தகவலும் தெரியவந்துள்ளது. மகள் மற்றும் மருமகனை அதிகாரிகள் வரவழைத்து அப்பாராவை ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News