தமிழ்நாடு
"ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி" என தன்னை அழைக்க வேண்டாம்- சாய்ரா பானு வேண்டுகோள்
- நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம்.
- கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என தன்னை அழைக்க வேண்டாம் என ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், " நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, எந்த வகையிலும் நான் அழுத்தம் தர விரும்பவில்லை.
நாங்கள் பிரிந்திருந்தாலும் அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.