தமிழ்நாடு
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
- ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டுகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, நாசர், அன்பரசன், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, எம்.ஜி.ஆரின் 108ஆவது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் 108 கிலோ கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.