தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைதானவருக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை- அமைச்சர் துரைமுருகன்

Published On 2024-12-26 08:14 GMT   |   Update On 2024-12-26 08:14 GMT
  • அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைதானவருக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை.
  • இட ஒதுக்கீடு கொடுத்தால் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என அன்புமணி கூறியுள்ளது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

வேலூர்:

வேலூர் அடுத்த ஜங்காலப்பள்ளி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைதானவருக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. எதிர்க்கட்சிகள் செய்வது சில்லித்தனமான வேலை இது.

இட ஒதுக்கீடு கொடுத்தால் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என அன்புமணி கூறியுள்ளது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News