தமிழ்நாடு
1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மேற்படிப்பு இடங்கள் பறிபோகும் அபாயம்- அமைச்சர் மா.சுப்ரமணியன்
- இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது.
- சட்ட ரீதியான ஆலோசனை நடத்தி, தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாநில அரசுக்கென தனி ஒதுக்கீடு கூடாது என்ற உத்தரவு மாநில உரிமைகளுக்கு எதிரானது.
* இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது.
* 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மேற்படிப்பு இடங்கள் பறிபோகும் அபாயம்.
* சட்ட ரீதியான ஆலோசனை நடத்தி, தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
* மருத்துவப்படிப்பிற்கான மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறினார்.