தமிழ்நாடு

ஆவடி மாநகராட்சியுடன் இணையும் பூந்தமல்லி, திருவேற்காடு-திருநின்றவூர் நகராட்சிகள்

Published On 2025-01-02 11:49 IST   |   Update On 2025-01-02 11:49:00 IST
  • பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளரிடம் முறையிடலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.
  • ஆவடி மாநராட்சி சுமார் 181.82 சதுர கிமீ. பரப்பளவில் அமையும்.

ஆவடி:

ஆவடி மாநகராட்சியின் எல்லை 65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த நிலையில் ஆவடி மாநகராட்சியின் எல்லையை வரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி ஆவடி மாநகராட்சியுடன் பூந்தமல்லி. திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய 3 நகராட்சிகள் இணைகின்றன.

இதேபோல் கருணாகரச்சேரி. நடுக்குத்தகை, நெமிலிச்சேரி, மோரை, பாலவீடு, வெள்ளானூர். அயப்பாக்கம், காட்டுப்பாக்கம், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி, பாணவேடுதோட்டம், சென்னீர்குப்பம். நசரத்பேட்டை, பாரிவாக்கம், வரதராஜபுரம், அகரமேல், மேப்பூர் ஆகிய 17 கிராம ஊராட்சிகளும் சேருகின்றன.

இதையடுத்து 3 நகராட்சிகள் மற்றும் 17 ஊராட்சிகளை இணைத்த பிறகு ஆவடி மாநராட்சி சுமார் 181.82 சதுர கிமீ. பரப்பளவில் அமையும்.


இதில் பூந்ததவல்லி மற்றும் திருவேற்காடு நகராட்சிகள், சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. பூந்தமல்லியில் சென்னை மெட்ரோ ரெயில் சேவை வருகிற 2026-ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. மற்றும் 100 வருட பழமையான அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவேற்காட்டில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ள பாரம்பரிய நகரமாகும்.

திருநின்றவூர் நகராட்சியில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான பக்தவச்சல பெருமாள் கோவில் மற்றும் பூந்தமல்லி, திருநின்றவூர். மோரை, வெள்ளலூர் பகுதிகளை இணைக்கும் வெளிவட்டச் சாலை(வண்டலூர் முதல் மாதவரம் வரை) அமைந்துள்ளது. இந்த 20 உள்ளாட்சி அமைப்புகளையும் ஆவடி மாநகராட்சியுடன் இணைப்பதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன் அடிப்படை வசதிகளும் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நகராட்சிகள், ஊராட்சிகளை மாநராட்சியுடன் இணைப்பது குறித்து ஆட்சேபனைகள் இருந்தால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளரிடம் முறையிடலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News