நெல்லை கொலை சம்பவம்- அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
- சம்பவ இடத்திலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்ட நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது, மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும், அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது, இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.