தமிழ்நாடு
தடையை மீறி கருப்பு தின பேரணி- அண்ணாமலை, வானதி சீனிவாசன் கைது
- பாஜகவினர் தமிழக அரசை கண்டித்து பேரணி நடத்தினர்.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
கோயம்பத்தூரில் தமிழக அரசை கண்டித்து தடையை மீறி கருப்பு தின பேரணியை பாஜகவினர் இன்று நடத்தினர்
கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் தமிழக அரசை கண்டித்து பேரணி நடத்தினர்.
இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
இந்நிலையில், தடையை மீறி பேரணி சென்றதாக அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்பட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.