தமிழ்நாடு
துணை வேந்தர் நியமன விவகாரம்- தமிழக அரசின் மீது ஆளுநர் குற்றச்சாட்டு
- 3 பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
- யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்தால், அது நீதிமன்றத்தால் நிராகரிப்பட நேரிடும்.
துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடல் குழு விவகாரத்தில் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
அதில், " உயர்கல்வி அமைச்சருக்கு தவறாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு குழுவில் வேண்டுமென்றே பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினர் தவிர்க்கப்பட்டிருக்கிறார்.
3 பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்தால், அது நீதிமன்றத்தால் நிராகரிப்பட நேரிடும்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரை சேர்த்து புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணையை வெளியிட வேண்டும்" என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.