தமிழ்நாடு

நம்பிக்கையில்லா தீர்மானம்: ஓ.பி.எஸ். தரப்பினர் ஆதரவு - பரபரப்பு விவாதம்

Published On 2025-03-17 11:40 IST   |   Update On 2025-03-17 11:40:00 IST
  • நாங்கள் வெளிநடப்பு செய்தால் போங்க... போங்க... என எங்களை பார்த்து சபாநாயகர் நகைக்கிறார்.
  • வரலாற்று சிறப்புமிக்க பேரவை தலைவரை பெற்றுள்ளோம் - செல்வப்பெருந்தகை

சட்டசபை சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு தொடங்கியது.

சபாநாயகர் அப்பாவு இருக்கையை விட்டு இறங்கினார். அவையை துணை சபாநாயகர் நடத்தினார்.

சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையில், சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுகிறார். கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்வதில்லை. எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்று ஆவேசமாக கூறினார்.

எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பதிலடி அளித்தனர்.

கடந்த கால பிரச்சனைகள் எல்லாம் ஏன் பேசுகிறார்கள். அதற்கும் அப்பாவுவிற்கும் என்ன சம்பந்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இங்கே விவாதமா நடக்கிறது? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

மக்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும்பொழுது அதனை பேச அவை தலைவர் அனுமதிக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி

நாங்கள் வெளிநடப்பு செய்தால் போங்க... போங்க... என எங்களை பார்த்து சபாநாயகர் நகைக்கிறார். சட்டசபை தலைவர் ஒரு தலைபட்சமாக நடந்துகொள்ளுவது எப்படி நியாயமாக இருக்கும்- எடப்பாடி பழனிசாமி

சபாநாயகர் அப்பாவுவை காங்கிரஸ் பேரியக்கம் ஆதரிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

சபாநாயகர் அப்பாவு இரண்டு பக்கத்தின் கருத்துக்களையும் கேட்கிறார்- செல்வப்பெருந்தகை

நான் பேச மறந்ததை சபாநாயகர் பேச ஆரம்பித்து விடுகிறார். வரலாற்று சிறப்புமிக்க பேரவை தலைவரை பெற்றுள்ளோம் -செல்வப்பெருந்தகை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் இன்று சட்டசபைக்கு வரவில்லை.

Tags:    

Similar News