தமிழ்நாடு

வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை திடீர் உயர்வு

Published On 2025-01-01 08:50 GMT   |   Update On 2025-01-01 08:50 GMT
  • உச்சத்தில் இருந்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது.
  • தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

போரூர்:

கோயம்பேடு, மார்க்கெட்டில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை கடும் உயர்ந்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.70க்கு மட்டுமே விற்கப்பட்டது.

இந்த நிலையில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.110-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் பரவலாக பெய்து வரும் மழையால் வரத்து குறைந்து உள்ளதால் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் மொத்த விற்பனையில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.200-க்கும், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் கிலோ ரூ.80-க்கும், ஊட்டி கேரட் மற்றும் பீட்ரூட் கிலோ ரூ.70-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News