தமிழ்நாடு

சீமான் மீது காவல் ஆணையரகத்தில் தி.மு.க. புகார்

Published On 2025-01-09 13:36 IST   |   Update On 2025-01-09 13:36:00 IST
  • சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
  • சீமான் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல் சீமான் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் சென்னை ஆணையர் அலவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News