தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி- பிளஸ்-2 மாணவரை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2025-02-24 11:38 IST   |   Update On 2025-02-24 11:38:00 IST
  • தந்தையிடம் நடந்ததை கூறியதை தொடர்ந்து பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
  • கழுத்தறுக்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குளித்தலை:

கரூர் மாவட்ட பகுதியை சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் பழகியதாக தெரிகிறது. நேற்று இரவு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு தனியாக வரவழைத்ததோடு காட்டுப் பகுதியில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

மாணவி அலறியடித்து தப்பி வீட்டிற்கு வந்தார். தனது தந்தையிடம் நடந்ததை கூறியதை தொடர்ந்து பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து பாலவிடுதி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மாணவனை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழுத்தறுக்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News