பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வரும் 25ம் தேதி வரை நீட்டிப்பு
- பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.
- பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள் 25ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது. இலவச வேட்டி-சேலைகளும் ரேசனில் வழங்கப்படுகிறது.
சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நியாய விலைக் கடடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் வரும் 25ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி 85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்று பயன்பெறுமாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.