தமிழ்நாடு

கூட்டணி குறித்து அடுத்த பிறந்தநாளில் சொல்கிறேன்- பிரேமலதா

Published On 2025-03-18 14:57 IST   |   Update On 2025-03-18 14:57:00 IST
  • பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.
  • எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என தொண்டர்களிடம் எவ்வளவோ சொன்னேன்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிரேமலதா விஜயகாந்த் கொண்டாடினார்.

இதனை தொடர்ந்து, விஜயகாந்த் இல்லாமல் எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என தொண்டர்களிடம் எவ்வளவோ சொன்னேன். ஆனால் அவர்கள்தான் இந்த பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்துள்ளனர் என்று கூறினார். மேலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, 2026 மார்ச் 18-ந்தேதி என்னுடைய அடுத்த பிறந்தநாளன்று தெளிவாக சொல்கிறேன் என கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றி குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.

தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. சார்பில் இதுவரை குறிப்பிடப்படவில்லை. தே.மு.தி.க.வினர் மட்டுமே தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேசி வருவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது. 

Tags:    

Similar News