எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஐஜி ஏ.ஜி. பாபு ஆய்வு
- பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது தெரிய வந்தது.
- பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருப்பூர் வழியாக பெங்களூரு செல்லும் ரெயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கை, கால் உடைந்த நிலையில் அந்த கர்ப்பிணி மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை நேற்று பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது தெரிய வந்தது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஐஜி ஏ.ஜி. பாபு ஆய்வு நடத்தினார்.
அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.