தமிழ்நாடு
தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா - ஆர்.பி.உதயகுமார்
- அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- தமிழகத்தின் நலனுக்காக அவர் முன் வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டி உள்ளார். அவர் பேசிய வீடியோவில்,
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு வடிவமாக பார்க்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2 மணி நேரத்துக்கு மேலாக தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி இருப்பது பற்றி பல கருத்துகள் எழுந்துள்ளன.
தமிழகத்தின் நலனுக்காக அவர் முன் வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி உள்ளார்.