தமிழ்நாடு
சட்டசபைக்கு செல்லவில்லையா? என தொகுதி மக்கள் கேட்கிறார்கள்- ஆர்.பி.உதயகுமார் பேச்சு
- சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசியதை நேற்று நேரடி ஒளிபரப்பாக காட்டவில்லை.
- சட்டமன்றம் அனைவருக்கும் பொதுவானதுதானே.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரடி ஒளிபரப்பு தொடர்பான ஒரு பிரச்சனையை எழுப்பி பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசியதை நேற்று நேரடி ஒளிபரப்பாக காட்டவில்லை. இதனால் தொகுதி மக்கள் சட்டசபைக்கு செல்லவில்லையா? என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். சட்டமன்றம் அனைவருக்கும் பொதுவானதுதானே. ஏன் இத்தகைய மாற்றத்தை செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, 'திட்டமிட்டு அது போன்று செயல்படவில்லை. அதுபற்றி விசாரித்து சொல்கிறேன்' என்றார்.