அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு
- மாணவர்கள் மாலை 6.30 மணிக்குள் விடுதிக்கு செல்ல வேண்டும்.
- விடுதிக்கு தாமதமாக வர நேரிட்டால் முன்கூட்டியே வார்டனுக்கு தகவல் அளிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மாலை 6.30 மணிக்குள் விடுதிக்கு செல்ல வேண்டும். முன்னதாக 8.30 மணி வரை செல்லலாம். தற்போது அது 6.30 மணியாக குறைக்கப்பட்டுள்ளது. விடுதிக்கு தாமதமாக வர நேரிட்டால் முன்கூட்டியே வார்டனுக்கு தகவல் அளிக்க வேண்டும். மாணவர்கள் தகவல் அளிக்காமல் விடுதிக்கு தாமதமாக வந்தால் பெற்றோரிடம் தகவல் அளிக்க முடிவு.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும். அடையாள அட்டை அணியாத மாணவர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை பாயும்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.