தவெக மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
- தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடக்கிறது.
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக இன்று இரவே விக்கிரவாண்டிக்கு கட்சி தலைவர் விஜய் வருகிறார்.
நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு திடல் முன்பு சாலையோரம் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக இன்று இரவே விக்கிரவாண்டிக்கு கட்சி தலைவர் விஜய் வருகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வருகை தருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு வருவோர், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது.
செல்பி ஸ்டிக் பயன்படுத்த கூடாது. வீடியோ, பிளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதி இல்லை.
தொண்டர்கள் மது அருந்திவிட்டு வருகை தரக்கூடாது, சட்டவிரோத பொருட்களை கொண்டு வரக் கூடாது.